Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 13, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 மார்ச் 23 , பி.ப. 01:32 - 0 - 1748
ஒஸ்கார் விருதை வென்ற புகழ்பெற்ற ஹொலிவூட் நடிகைகளில் ஒருவரான எலிஸபெத் டெய்லர் இன்று காலாமானார். 79 வயதான எலிஸபெத் டெய்லர் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் பிறந்த எலிஸபெத் டெய்லர் 9 வயதிலேயே திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியவர். இருதடவை ஒஸ்கார் விருதை வென்றுள்ளார்.
ஹொலிவூட் வரலாற்றின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவரான எலிஸபெத் டெய்லர் அதிக தடவை திருமணம் செய்தமைக்காகவும் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 7 பேரை திருமணம் செய்திருந்தார்.
அண்மைக்காலமாக அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த 6 வாரங்களாக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
'கிளியோபட்ரா' திரைப்படத்தில் நடிகர் ரிச்சர்ட் பார்ட்டனுடன் இணைந்து நடித்தபோது அவருக்கும் எலிஸபெத் டெய்லருக்கும் காதல் மலர்ந்தது. பலபடங்களில் இணைந்த நடித்த இவர்கள் பின்னர் திருமணம் செய்தனர். ரிச்சர்ட் பார்ட்டனை எலிஸபெத் டெய்லர் இருதடவை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago