2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

ஏ.ஆர்.ரஹ்மானின் 20 வருட இசை வாழ்க்கையையொட்டி பிரமாண்ட விழா

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 09 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இசைப்புயல்'  ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்பட உலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 வருடங்கள் பூர்த்தியாவதையொட்டியும் அவரை கௌரவிக்கும் வகையிலும்  சென்னையில் பிரமாண்ட விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி  சென்னை காமராஜர் அரங்கத்தில் இவ்விழா நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ரோஜா' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசை வாழ்க்கையை  ஆரம்பித்த ஏ.ஆர். ரஹ்மான்,  தேசிய விருதுகளும் இரட்டை ஆஸ்கர் விருதுகளும் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தவர்.

ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவிக்கும் முகமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகளென திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இவ்விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .