2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாரடைப்பை தடுப்பதற்கு 6 விதிகள்

Gavitha   / 2015 ஜனவரி 07 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய நவீன உலகில், மக்களின் வாழ்;க்கை முறைமையே 75 வீதமானவர்களின் மாரடைப்புக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இளம் வயதிலே மாரடைப்புக் காரணமாக உயிரிழப்பவர்களின் தொகை தற்போது அதிகரித்துள்ளது. எளிமையான 6 விதிகளை கடைபிடித்தால் மாரடைப்பை தடுக்கலாமென ஆய்வுகளின் மூலம் கண்டிறியப்பட்டுள்ளது.

முக்கியமாக இந்த 6 விதிகளையும் இளம் வயதில் இருக்கும் பெண்கள் கடைபிடிப்பார்களாயின், நிச்சயம் மாரடைப்பை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்று அவ் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

புகைத்தலை நிறுத்துதல், சுகாதாரமான எடையை பராமரித்தல், ஒரு கிழமைக்கு 150 நிமிட உடற்பயிற்சி செய்தல், கிழமைக்கு 7 மணித்தியாலங்களுக்கும் மேலதிகமாக தொலைகாட்சி பார்ப்பதை தவிர்த்தல், ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஒரு பானம் அருந்துதல் மற்றும் சுகாதாரமான உணவுகளை உட்கொள்ளுதல் என்பவையே அந்த 6 விதிகளாகும்.

இந்த விதிமுறைகள் 30-40 வயதுடைய பெண்களுக்கு பொருந்துமென மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு தசாப்தங்களாக 70,000 பெண் தாதிமார்களின் நடவடிக்கைகளை அவதானித்தே இவ்வறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொது சுகாதார பல்கலைக்கழக சுகாதார பிரிவின் நோய் மற்றும் கதிர்வீச்சு ஆய்வின் முன்னணி ஆய்வு எழுத்தாளர் அன்ரியா சொமிஸ்டெக் என்பவரே இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளார்.

'இந்த விதிமுறைகள் தற்போது வாழும் பெண்களுக்கு மிக முக்கியமான செய்தியாகும். மது அருந்துதல் மற்றும் புகைத்தல் என்பதை தற்கால பெண்கள் அவர்களது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே மாரடைப்புக்காக மருந்து பயன்படுத்துவோரும் மாரடைப்பு வருவதை தடுப்போருக்கும் இவ்விதிமுறைகள் மிகவும் பொருந்தும். இனிவரும் சமுதாயம் நல்லதொரு சமுதாயமாக இருக்க வேண்டுமாயின் இவற்றை கடைப்பிடிப்பது அவசியம்' என்று அவர் கோரியுள்ளார்.

எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆரோக்கமியமான வாழ்வை வாழ பழகுவோம்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .