2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சிறுவயதில் இரண்டாம் மொழி கற்றால் அறிவாற்றல் அதிகரிக்கும்

Gavitha   / 2015 ஜனவரி 14 , மு.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறு வயதிலேயே இரண்டாம் மொழியை கற்பதன் மூலம் நீண்ட அறிவாற்றலை அதிகரிக்க முடியும் என்றும் 10 வயதிலிருந்து கற்பதன் மூலம் மாத்திரமே அதன் பயனைபெற்றுக் கொள்ளமுடியும் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிறுவயதில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக கற்கும் சிறுவர்களின் மூளையின் வெண்ணிற பகுதி விருத்தியடைவதாகவும் அது அவர்களது அறிவுத்திறனை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆராய்ச்சியானது பிரிட்டனில்; வாழும் 30 வயதுக்குட்பட்ட 20 பேரிடம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

10 வயதிலிருந்தே ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாக பயின்று வருகின்றவர்களையும் ஆங்கிலத்தை முதன்மைமொழியாக பயின்று வருபவர்களையும் ஒப்பிட்டே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உளவியலுக்கான பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்,கிரிஸ்டோஸ் பிளஸ்டிகாஸ் என்பவரை தலைமையாக கொண்ட குழுவினரால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருமொழியை விட மற்றைய மொழியை கூடுதலாக கற்கும் போது, மூளை விருத்தியடையும் பகுதியின் அறிவாற்றல் தூண்டப்படும். இந்த தூண்டுதல் சிறுவயதிலிருந்தே ஏற்படுமாயின்,அதன் நிலைப்பாடு சரியாது,நிலையாக இருக்கும் என்றுபேராசிரியர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு10 வயதின் பின்னர் ஆங்கிலத்தையோ வேறு மொழிகளையோ இரண்டாம் மொழியாக கற்போர்,ஆங்கிலத்தை முதன்மை மொழியாக கற்போரையும், இளைஞர் பருவத்தில் ஆங்கிலம் கற்போரையும் விடமிகவும் திறமையுடன் செயற்படுகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் இதற்காக இன்னுமொரு ஆராயச்சி மேற்கொள்ளப்போவதாக, ஆராய்;ச்சியை மேற்கொண்டபேராசிரியர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .