2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பால்நிலை வன்முறையை தடுக்க உதவும் கல்வி

Gavitha   / 2014 ஜூலை 29 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அஷானி கொட்டகே


சராசரி மாணவன் ஒருவனுக்கு கல்வி எனும் பதமானது சலிப்பூட்டும் ஆசிரியர், நீண்டு செல்லும் மணித்தியாளங்கள், முடிவில்லாத வீட்டு வேலைகள், அழுத்தம் தரும் பரீட்சைகள் என்பவற்றையே குறிக்கும். இருப்பினும் பாடசாலையும் கற்றலும் ஒரு தனியாளுக்கு கல்வியூட்ட சேர்ந்து வேரைசெய்யும் இரண்டு சமாந்தரமான தனிமங்கள் என்பது பிழையாக விளங்கப்பட்ட எண்ணக்கருக்களில் ஒன்றாக உள்ளது. கல்விக்கு முடிவொன்று இல்ரை என்பதையே பலர் விளங்கிக்கொள்ள தவறுகின்றனர்.

ஒரு புத்தகத்தை படித்தல், சோதனையில் சித்தியடைதல், படிப்பை முடித்தல் என்பதல்ல கல்வி. கற்றல் என்பது ஒருவர் பிறந்த கணத்திலிருந்து இறக்கும் கணம் வரை வாழ்நாள் முழுவதும் நடைபெறும் செயன்முறையே கல்வியாகும். மேலும் கற்றல் அல்லது கல்வி என்பது ஆகவும் கூடிய சக்திமிக்க ஆயுதமாகும்.


ஆத்திரமூட்டும் துஷ்பிரயோக நடவடிக்கைகளையும் பல்வேறு துறைகளிலும் பெருகியுள்ள வன்முறைகளையும் கையாள்வதற்காக பிரயோகிக்க கூடிய  சக்திமிக்க ஆயுதம் கல்வியாகும். கல்வியானது சுதந்திரத்தின் தங்க கதவை திறக்கும் திறவு கோலாகும்.

இது பௌதிக சிறையாகவோ அல்லது உளரீதியான சிறையாகவோ இருக்கலாம். நாம் முகம்கொடுக்கும் தடைகள் எதுவாயினும் அவற்றிலிருந்து தப்பவும், தாண்டவும் தேவையான வாய்ப்புகளையும் கருவிகளையும் கல்வி வழங்குகின்றது. பால்நிலை அடிப்படையிலான வன்முறை, மிகவும் இக்கட்டான நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. இந்த நிலைமையை, போதுமான அறிவையும் விழிப்புணர்வையும் தேவைப்படும் சமுதாயத்துக்கு வழங்குவதால் வெற்றிகொள்ள முடியும்.

மேலும் வன்முறையும் துஷ்பிரயோகமும் நாட்டின் பெரும்பாலும் ஏனைய பகுதிகளிலிருந்து தனித்து போயுள்ள சமுதாயங்களில் காணப்படுகின்றன.
இதனால் பெண்கள், சிறுவர்கள் தமக்கு அநியாயம் நடப்பதையும் இதனை கடும் நடவடிக்கை மூலம் நிறுத்த முடியுமென்பதையும் அறியாதவர்களாக உள்ளனர். இருப்பினும் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி, கெடுதி செய்பவரும், தான் செய்வது அறிவுகெட்ட, சட்டத்தை மீறிய, பகுத்தறிவற்ற செயல் என்பதையும் உணராது உள்ளனர். ஒருவர் பெண்ணாக இருப்பதனால் அவளை அடிப்பது, பலாத்காரம் செய்வது என்பன ஏற்புடையது என அவர்களின் அறிவூட்டப்படாத இயல்பில் பதிவாகியுள்ளது.


அறியாமையில் வேர்கொண்டுள்ள துஷ்பிரயோகத்துக்கு அப்பால் பால்நிலை, அடிப்படையிலான வன்முறைக்கு இன்னொரு பிரதான காரணியாக அமைவது பால்நிலை அடிப்படையில் பிள்ளைகளை விரும்புவதாகும்.
 
புராதன காலத்தில் ஆண்கள் அதிகம் பலம்வாய்ந்தவர்களாக கருதப்பட்டதனால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பால்நிலை வார்ப்பு சிந்தனைக்குட்பட்டு ஆண் பிள்ளைகளை கூடுதலாக விரும்பும் நிலை உருவானது. ஆண்களின் நிறமூர்த்தமே ஒரு பிள்ளையின் பால்நிலையை தீர்மானிக்கின்றது என்பது இன்னும் அறியப்படாமல் உள்ளது. இதை எந்த ஆண்களாலும் அல்லது பெண்களாலும் மாற்ற முடியாது என்பது மற்றுமொரு விடயம்.

கல்வியினூடாகவே, இருபால் பிள்ளைகளும் வளர்ந்தோரும் ஒருவருடைய பால்நிலை யாதாக இருப்பினும் நாம் எல்லோரும் ஒரே கலங்களில் ஆனவர்கள், எமது உடலினூடாக ஒரே இரத்தமே ஓடுகின்றது என்பதை விளங்கிகொள்ள முடியும். எனவே ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ ஒவ்வொரு தனியாளுக்கும் சம உரிமை உண்டு. இந்த மனோபாவம் கல்வியுனூடாகவே கொண்டுவரப்பட முடியும்.

கல்வியும் வலுவூட்டலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். அதிகாரம் என்பது எடுத்து கொள்ளப்படுவதாகும். அது கொடுக்கப்படுவதில்லை. அதிகாரத்தை எடுத்து கொள்ளும் செயன்முறை தன்னை வலுவுடையவராக்கி கொள்வதாகும். இதுவே பால்நிலை அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையானதாகும். இவர்கள் கல்வியூட்டப்பட்டு, இந்த அநீதி கொடியது எனவும் நிற்பாட்ட முடியும் எனவும் உணரும்போது பாதிக்கப்படும் பெண்கள் சுரண்டப்பட மறுப்பதில் துணிவு பெற்றவர்களாகவும் தம்மீது தீயச்செயல் புரிவோரை நேரடியாகவோ மறைமுகமாகவோ எதிர்த்து நிற்கக்கூடிய தன்மையை பெறுவர்.


வலுவூட்டல் என்பது பௌதீக பாதுகாப்பு முறையாக தோற்றமளிப்பினும் இது பெருமளவில் மனோபாவம் சார்ந்தது என்பதே உண்மையாகும். கல்வியுடான வலுவூட்டல் ஊடாக பாதிக்கப்படுவோரும் பாதிக்கப்பட கூடியோரும் தமது சூழலை விளங்கிகொள்ளவும் தம்மை துஷ்பிரயோகம் செய்வோரை இனங்காணவும் இயலக்கூடியவர்கள் ஆவர். வலுவூட்டல் நடக்கும்போது இவர்கள் தம்மை வலுமிக்க சுயதீனமானவர்களாக காட்டவும் செயற்படவும் முடியும். இப்போது இவர்களிடம் லஞ்சத்தையோ பயமுறுத்தலையோ மிரட்டலையோ எதிர்த்து நிற்கும் சக்தியும் உறுதிப்பாடும் ஏற்படும். வலுவூட்டல் நடந்தவுடன் பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி முழு சமுதாயமுமே பலம்பெறும்.
 
அறியாமை பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு பிரதான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், அறியாமையை நீக்கவும் பாதிக்கப்பட்டவர்களை ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு வலுவூட்டவும் போதுமான விழிப்புணர்வை பயன்படுத்த முடியும்.
இந்த உலகை மாற்றியமைப்பதற்கு பயன்படக்கூடிய அதிசக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியாகும். இதனால்தான் நாம் கல்வி, பால்நிலை அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கு வினைத்திறன் மிக்க அதியுயர்ந்த சக்திவாய்ந்த ஆயுதமாக கருதுகின்றோம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .