2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கானல் நீராகும் உறவுகள்

George   / 2014 ஜூலை 22 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


காதலன் - காதலி,சொந்த - பந்தம், கணவன் - மனைவி, நண்பர்கள் என்று இன்றைய காலகட்டத்தில், நீண்ட கால உறவு என்பது வெறும் கானல் நீர்தான். இத்தகைய உறவுகளை நீட்டித்துக் கொண்டிருப்பது அவ்வளவு எளிதல்ல.

ஏகப்பட்ட தியாகங்கள், எதற்கும் வளைந்து கொடுக்கும் பண்புகள், கடுமையான முயற்சிகள் ஆகியவை மூலமாகத் தான் நல்ல தரமான உறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நாம் புதிய உறவுகளை எப்போது வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அந்த உறவுகளைத் தக்கவைத்துக் கொள்வது கடினமான ஒன்று.

சில சமயம் எவ்வளவோ முயற்சிகளையும், தியாகங்களையும் கொட்டித் தீர்த்தாலும் அவை தோல்வியில் தான் சென்று முடியும். அதற்குப் பின் அந்த இருவருக்கும் இடையிலான ஒரு உறவை நினைத்துப் பார்க்கவும் முடியாது.

ஆகவே, இருவரும் ஒரேவிதமான மனநிலையுடன் எப்போதும் இருந்தால் தான் அது நல்ல, நீண்டகால உறவுக்கான அடித்தளமாக இருக்க முடியும். இந்த அடிப்படை அம்சம் கூட இல்லாத வாழ்க்கை, எந்த நிமிடத்திலும் துண்டிக்கப்படலாம்.

உண்மையில், எல்லா உறவுகளிலும் சில ஏற்றத் தாழ்வுகள் இருப்பது சகஜம் தான். அந்த இருவருக்கிடையில் அடிக்கடி விவாதங்கள் ஏற்பட்டாலும், அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் இதுப்போன்ற விவாதங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால், அவர்களுடைய உறவில் ஏற்படும் விரிசலும் அதிகரித்துக் கொண்டு தான் செல்லும்.

சொந்தமோ, காதலோ, நட்போ எந்த உறவாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நேரம் ஒதுக்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியம். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவர் திளைக்கும் போது முறையே அந்த மகிழ்வையும், சோகத்தையும் பகிர்ந்து கொள்ள அடுத்தவர் நேரத்தை ஒதுக்கவில்லையென்றால், அந்த உறவு நீடிக்காது.

இதே வேளை, ஒருவர் ஒரு விடயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, அவருடைய துணை அந்த விஷயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தால் அவருக்கு அந்த உறவு போரடித்து விட்டது என்று தான் அர்த்தம். இருவரும் இதுகுறித்துப் பேசி ஒரு நல்ல முடிவை எடுத்தால் நல்லது. இல்லாவிட்டால் அந்த உறவு அவ்வளவுதான்.

விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு இருந்தால் உறவுகளில் விரிசல் ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். ஒரு உறவு பிரியும் போது ஏற்படும் வலிகளில் இருந்தும் எம்மை தவிர்த்து கொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .