2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

இயற்கையான உறக்கத்திற்கான சில வழிகள்

Kanagaraj   / 2014 மே 04 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


உறக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியம். போதியளவு உறக்கம் இல்லாத போது உங்களது இயல்பு வாழ்கை பாதிக்கப்படுவதுடன் தேவையில்லாத மன அழுத்தங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு இது காரணமாக அமையலாம் என மருத்துவ ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஆழ்ந்த உறக்கமானது உங்களின் ஆரோக்கியமான பழக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். நல்ல உறக்கம் உடல் மற்றும் மன நிலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாகப் பயன்படும். சில சமயம் நமக்கு நல்ல உறக்கம் தேவைப்பட்டு உறங்க வேண்டும் என்று நினைத்தாலும், உங்களால் உறங்க இயலாது.

எனவே நல்ல உறக்கம் பெறுவதற்கான சில இயற்கையான வழிகள் கீழே தரப்பட்டுள்ளது.

மெலடோனின் என்ற ஹார்மோன் நமக்கு உறக்கத்தை கொடுப்பதுடன் நம் உடம்பில் இயற்கையாகவே சுரப்பதுடன் மாத்திரையாகவும் கிடைக்கிறது. பொதுவாக 3 முதல் 5 மிகி மெலடோனின் ஒரு நாள் இரவு உறக்கத்திற்குப் போதுமானதாக இருக்கும். இது உடலில் இயற்கையாக சுரப்பதை பாதிப்பதால் உறக்கம் வருவதும் தடைபடுகின்றது.

எனினும் மெலடோனின் மாத்திரைகளை மிகவும் அவசியம் ஏற்படும் நேரங்களில் மட்டும் எடுத்துக் கொள்வது உகந்தது. இந்த இயற்கை கூட்டு மருந்து ஜெட்லாக் எனப்படும் விமானக் களைப்பைப் போக்கவும், சத்தம் அதிகமுள்ள அல்லது வசதி குறைவான பேருந்துப் பயணம், விமானப் பயணம் அல்லது வெளியில் தங்குதல் ஆகியவற்றின் போது தூக்கத்தைப் பெற மிகவும் சக்தி வாய்ந்தது.

உடற்பயிற்சி  சாதாரண விடயம் என்று நீங்கள் கருதலாம். ஆனால், நம்பினால் நம்புங்கள், பலர் உடற்பயிற்சிக்கும் தூக்கத்திற்கும் உள்ளத் தொடர்பை உணர்வதில்லை. தெளிவாகச் சொன்னால், ஒரு நாளில் உடம்பை நல்ல உழைப்பில் ஈடுபடுத்தினால், மாலையில் சோர்வடைவதுடன் சில தருணங்களில் உறக்கம் வருவதுடன் ஆழந்த உறக்கத்திற்கும் வழிவகுக்கும்.

மேலும் தொடர்ந்து மேற்கொள்ளும் உடற்பயிற்சி உடல் நலத்தையும், உடல் எடையையும் சரிப்படுத்துவதுடன் இந்த இரண்டும் நம்முடைய தூக்கத்துடனும் தொடர்புடையவை.

படித்தல் மற்றும் எழுதுதல் என்பன தூக்கத்தை இயற்கையாகவே வரவழைப்பதற்கான வழிமுறையாக சொல்லப்படுகின்றது. இதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லையென்றாலும், பெரும்பாலானோர் உறங்குவதற்கு முன் படிப்பது அல்லது எழுதுவது சற்று இளைப்பார உதவுவதாகக் கருதுகின்றனர்.

எழுதுவது உங்கள் மனதை சற்று அமைதிப்படுத்துவதுடன், உங்கள் மனதில் உள்ள உளைச்சல்கள் மற்றும் உணர்ச்சிகளை வெளியேற்றவும் உதவும். இதை முயற்சி செய்ய தினமும் உறங்கும் முன் இரு வாரத்திற்கு மாறி மாறி படிக்கவும் எழுதவும் செய்யுங்கள். இதற்காக அரை மணி முதல் ஒரு மணி வரை மட்டும் செய்வதோடு அதிகமாகவும் அதைச் செய்யாதீர்கள்!

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .