2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

நோயாளர்களிடம் வாய் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள பல்வைத்தியர்களிடம் கோரிக்கை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 01 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவு, நீர் உட்கொள்வதற்கும் மற்றவர்களுடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கும் வாய் மிகவும் முக்கியமானது.

ஏனையவர்களுடன் உரையாடும்போது மற்றையவர் முகங் சுழிக்கும் வகையில் இருப்பதானது எம்மைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை தோற்றுவிப்பதற்கு ஏதுவாய் அமைந்துவிடுகின்றது. 

இன்று அநேகமானவர்களிடம் வாய் துர்நாற்றம் காணப்படுவது சாதாரணமாகிவிட்டது. வாய் துர்நாற்றத்துடன் காணப்படுவர்களை கண்டால் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களின் மனம் நொந்துவிடக்கூடாது என்பதற்காக சகித்துகொள்பவர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.

வாய் துர்நாற்றம் பல்துலக்காத காரணத்தினால்தான் ஏற்படுகிறது என்று பொருளாகாது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. அஜீரரணக் கோளாறு. வாயுக் கோளாறு, முரசு கரைதல் போன்ற காரணிகளாலும் வாய் துர்நாற்றம் வீசச் செய்கின்றது. இவை அனைத்தையும் விட மிக முக்கியமான விடயம் வாய்ப்புற்றுநோய்.

அதிகமானவர்கள் அவர்களுக்கு தெரியாமலே வாய்ப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

வாயில் ஏற்படும் சிறிய மாற்றங்களாக இருந்தாலும் உடனடியாக பல்வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக்கொள்வது இன்றியமையாதது.

வாய்ப்புற்று நோயின் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் இதுதொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் வாய்ப்புற்று நோய் தொடர்பான பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு வாய்ப்புற்று நோய் இருக்கின்றாதா என்பதை பல்வைத்தியர்கள் கண்டறிய வேண்டிய தேவை உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வாய்ப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரித்து செல்வதாகவும் பல் வைத்தியர்கள் சிலர் இதனை தடுப்பதற்கான சந்தர்ப்பங்களை தவறிவிடுதவதாகவும் பிரிட்டனிலுள்ள புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்வைத்தியர்கள் அனைவரும் தம்மிடம் வரும் நோயாளர்களிடம் ஆபத்துக் காரணிகளான மது அருந்துதல், கடுமையான குடி பழக்கம் மற்றும் வாயில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து  கேட்டறிந்துக்கொள்வது அவசியமென மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.

வாய்ப் புற்றுநோயானது உதடு, நாக்கு, கன்னங்களின் புறப்பகுதி, பல்ஈறுகள், வாயின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை பாதிப்படைய செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோயின் இறுதித் தன்மையில் இவ்வாறு வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுமானால், குணப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே காணப்படும்.

ஆண், பெண் இருபாலரிடமும் வாய் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை அதிகரித்துச் செல்வதாகவும் மற்றம் 50 வயதிற்குட்பட்ட அனைத்து மட்டத்தினரும் இந்நோயினால் பாதிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, இளம் வயதினர் இந்நோயினை முன்கூட்டியே அறிந்துக்கொண்டு அதற்கான மருத்துவ சிகிச்சையை எடுத்துகொள்ளவேண்டுமென மேற்படி அமைப்பினர் தெரிவத்துள்ளனர்.

மது அருந்துதல், புகைத்தல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே இந்நோயினால் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் இதேவேளை, வாய் வழி பாலியல் செயற்பாட்டினால், ஒருவகை பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரிட்டனின் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் ஹசல் நன்,  'வாய்ப்புற்று நோயானது  பெரும்பாலும் நோயின் இறுதிக்கட்டத்திலே கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை என்பது பலனளிக்காமல் போனால் அது உயிர் ஆபத்தை விளைவித்துவிடும்' என தெரிவித்துள்ளார்.

'பல்வைத்தியர் ஒருவர் நோயாளிகளின் பற்கனை நன்கு அவதானித்தால் அவர் ஒரு நாளைக்கு 50 சிகரெட்களை புகைக்கின்றார் மது அருந்துகின்றார் என்பதை கூறமுடியயும். அவருக்கு மேலும் அதிகமான கவனங்களை செலுத்த நேரிடும்.

வாய்ப்புற்றுநோயானது ஆரம்பத்திலே கண்டறியப்படுமானால் 50 வீதம் முதல் 90 வீதம் வரை காப்பாற்ற முடியும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • Raveen Tuesday, 02 October 2012 11:44 AM

    வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன?

    Reply : 0       0

    muhmeen Monday, 29 October 2012 11:45 AM

    நல்ல கருத்து. அறிகுறி எப்படி?

    Reply : 0       0

    Prof Siddique Wednesday, 23 January 2013 04:51 PM

    வாய் மருத்துவப் பேராசிரியர், பேராதனைப் பல்கலைக்கழகம் என்ற காரண‌த்தால் சில தகவல்களைத் தெரிவிக்கலாம் என நினைக்கின்றேன். நமது நாட்டில் வாய்ப்புற்று நோய்க்கு முக்கிய காரணங்கள் புகையிலை, பாக்கு சேர்ந்த வெற்றிலை மெல்லுதல், புகைப்பழக்கம், அடிக்கடி மதுபானம் அருந்துதல் ஆகியவையாகும். பாபுல் போன்ற சுவையூட்டப்பட்ட பாக்குத் துகள்களை மெல்லுபவர்களுக்கும் வாய்ப்புற்று நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இப்பழக்கங்கள் இல்லாதவர்களுக்கு வாய்ப்புற்று நோய் வராது என்று கூற இயலாது. எனினும் அவ்வாறு வருவது மிகச் சொற்பமே. வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கு முன்னர் சில மாற்றங்கள் தென்படலாம். 3 வாரங்களுக்கு மேல் ஆறாமல் இருக்கும் புண், வெண்படலம், சிவப்பான படலம், வாயில் எரிவுடன் கூடிய நிலையில் வாயை நன்றாகத் திறப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருப்பின் பல்வைத்தியரை தாமதமின்றிக் காண வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .