Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
A.P.Mathan / 2010 ஓகஸ்ட் 19 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகா)
மூலிகைச் செடிகளின் மகத்துவத்தையும் அதன் புனிதத் தன்மையையும் உணர்ந்து கொண்ட அன்றைய காலத்தவர்கள் அவற்றினைப் பேணிப் பாதுகாத்து வந்தனர்.
ஆனால், தற்போது விஞ்ஞானம் வளர வளர இவ்வாறான மூலிகைச் செடிகளைப் பேணிப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் கொஞ்சம் கொஞ்சமாக அருகிப் போய்க்கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு.
அந்த வகையில், மூலிகைச் செடிகளுள் ராணியாக விளங்கும் துளசி எவ்வளவு மகத்துவமானது என்பதை இன்றைய காலத்தவர்கள் உணர்ந்து கொள்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
பல இனங்களைக் கொண்ட இந்த துளசிச் செடியில் கருந்துளசியும் வெண்துளசியுமே முக்கியமாக கருதப்படுகிறது. கோயில்களில் கூட துளசி இலை போட்டு ஊறவைத்த தீர்த்தம் வழங்குகிறார்கள்.
துளசியின் மருத்துவ குணத்தை சற்று நோக்குவோமானால், தொண்டைப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் துளசி இலை கசாயத்தை குடித்து வர புண் மாறும். தலையில் பொடுகுள்ளவர்கள் துளசி இலையை பசையாக்கி தலையில் வைத்து குளித்தால் பொடுகு நீங்கும். இவ்வாறு துளசிக்கு பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
இது தவிர, துளசிச் செடிக்கு நச்சுத்தன்மையை உறிஞ்சும் தன்மையுமிருப்பதுடன், துளசிச் செடியுள்ள இடங்களில் விஷக் கிருமிகளும் அணுகாது.
ஒவ்வொரு வீட்டிலும் துளசி செடி இருந்தால் அந்த வீடு மங்கலமடையும் என்பது ஐதீகம். விஞ்ஞான ரீதியில் நோக்கினாலும் இது பொருந்தும். அதாவது துளசியின் வாசம் எமது சுவாசத்தில் இணைவதால் சுத்தமான காற்றினை சுகமாக சுவாசிக்கும் பாக்கியம் எமக்குக் கிடைக்கிறது. அதேபோல் விஷக் கிருமிகளையும் இந்த துளசி செடிகள் நெருங்கவிடாது.
அதுமட்டுமல்லாமல் துளசியில் தண்டுகளை நறுக்கி சிறுசிறு துண்டுகளாக்கி மாலையாக அணிந்துகொண்டால் உடலில் தொற்றுநோய்கள் வராமலும் தடுக்கலாம். இதற்கு துளசிமாலை என்று சொல்வார்கள்.
xlntgson Thursday, 19 August 2010 09:19 PM
இது சாதாரணமாக வேலி ஓரம் வளரும் உஷ்ண மித உஷ்ண நாடுகளில் முயற்சி இன்றி வளரும். நுளம்புகளை தூரமாக்கும் நறுமணத்தைக் கொண்டிருக்கின்றன. நமக்கு வாசம், கொசுக்களுக்கு நாற்றம். வீட்டுக்குள்ளும் வளர்க்கலாம். ஆனால் அதிகம் தண்ணீர் விட வேண்டியதில்லை. ஒரு கிழமைக்கு ஒரு முறை விட்டாலும் போதும். துளசி மாடங்கள் பிராமணர்களின் வீட்டை வாசலில் அலங்கரிக்கும். உணவாகவும் கொள்ள இயலும் மருந்துகளின் அளவு கூட குறைய மருத்துவர் அவசியம் என்ற கட்டுப்பாடு எதுவும் இல்லை. சிறந்த மூலிகை. யாராவது 'பேடன்ட்' உரிமை பெற்றுவிடாமல் காக்க!
Reply : 0 0
shan Friday, 20 August 2010 11:30 AM
தயவு செய்து துளசியின் ஆங்கிலப் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ள முடியுமா?
Reply : 0 0
thilak Friday, 20 August 2010 05:34 PM
துளசியை ஆங்கிலத்தில் Ocimum tenuiflorum அல்லது tulsi, tulasī, or Holy Basil) என்பார்கள். அதன் தாவரவியல் பெயர் Ocimum tenuiflorum
Reply : 0 0
shan Saturday, 21 August 2010 10:59 AM
நன்றி தேங்க்ஸ், துளசியின் ஆங்கில பெயரை தந்தமைக்கு திலக்
Reply : 0 0
sheen Monday, 23 August 2010 09:23 PM
ocimum sanctum labiatae.
Reply : 0 0
chitra Tuesday, 03 April 2012 06:55 PM
நல்ல செய்தி. நன்றி. துளசியை எப்படி வளர்பது? அதின் கிளை நடலாம அல்லது அதின் டயரி சீட் பயன்படுத்தனுமா ? தயவு செய்து விளக்கம் அளியுங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
58 minute ago
1 hours ago