2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

‘எனது கலை மூலம் செய்து காட்டுவேன்’

Princiya Dixci   / 2016 நவம்பர் 10 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு சமயம் கொழும்பில் உலகப் பிரசித்தி பெற்ற மாய வித்தைக்காரர் பல்லாயிரம் ரசிகர்கள் மத்தியில் பலவித மாயாஜால வித்தைகளைக் காண்பித்தார். 

தன்னைக் கட்டிவைத்து அடைத்து மூடச்செய்தார். பின்னர் அவரது உதவியாளர் அவரை அழைக்க, அவரோ கூட்டத்திலிருந்த ரசிகர் மத்தியிலிருந்து எழுந்து ​மேடையில் ஏறினார். கூட்டத்தினர் வியப்புடன் கரகோசம் செய்தனர்.

தனது வித்தைகளை முடித்த பின்னர் மக்களிடம் இவ்வாறு சொன்னார். “இது ஒரு கலை; இப்போது பல சாமியார்கள் மக்களை ஏமாற்றுவதற்கு எதை எதையோ செய்கின்றார்கள். நான் சாமியார் அல்ல! ஆனால், இந்தச் சாமியார்கள் செய்யும் அனைத்து மோசடிகளையும் நான் அறிவேன். அவர்கள் செய்தவைகளை எனது கலை மூலம் செய்து காட்டுவேன்” என்றார்.  

இனியாவது அல்ல; எப்போதுமே தங்கள் போக்கை மக்கள் மாற்றவே மாட்டார்கள்.  

வாழ்வியல் தரிசனம் 10/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .