2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 19/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒருவருக்கு மிகமிகப் பிடித்தமானவை, அவை, மற்றையவர்களுக்குப் பிடிக்கும் என்பதில்லை. போயும் போயும் இதற்குப் போய் ஆசைப்படுகிறார்களே என்பார்கள்.

அரசியலில் ஈடுபடுபவர்களைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பவர்களும் உளர். அரசியலை அறவே வெறுத்து ஒதுக்குபவர்கள் ஒருபுறமிருக்க, இதனுள் நுழைய முற்படுபவர்களும் இதனோடு இரண்டறக் கலந்து கொண்டவர்களும் படும்பாடு, அப்பப்பா.

உண்மையான சேவை மனப்பான்மையுடையவர்கள் ஒருபுறம், ஏதோவோர் உள்நோக்குடன் உள் நுழைபவர்களே அநேகர். 

அரசியலும் திரைப்படமும் காசு ஈட்டும் தொழிலாகிவிட்டது. அரசியலில் தியாகமின்மையும், திரைப்படத் துறையில் கலையார்வம் இல்லாமலே வேறு எது எதற்கோ முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

செய்யும் தொழிலில் நேர்மை வேண்டும். மெய் வருந்த உழைக்க வேண்டும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .