Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோயாளிகளைப் பார்க்கச் செல்பவர்கள், அவர்களைத் தெம்பூட்டுவதை விடுத்து, பயமுறுத்தும் வார்த்தைப் பிரயோகங்களை இங்கிதமின்றிச் சொல்வர்.
இன்னும் சிலர், நோயாளர்களிடம் அவர்களது நோய்கள் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக, நேர வரையறையின்றிச் சொல்லிக் கொள்வார்கள்.
எந்த இடத்தில், எந்தச் சமயங்களில் எப்படிப் பேசுவதென்றே தெரியாமல் நடப்பது, கோபமும் எதிரிச்சலும் மற்றவர்களுக்கு ஏற்படும் என இத்தகையவர்கள் உணர்வதேயில்லை.
ஒரு சமயம், நோயுற்ற நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றேன். நண்பர், கழிப்பறைக்குச் சென்று விட்டார். அச்சமயம், அவரது உறவினரொருவர், நோயாளியின் கட்டிலில் சாவகாசமாகப் படுத்தபடி, பத்திரிகையொன்றைப் பார்த்தபடியிருந்தார்.
என்ன மனிதர் இவர்? திரும்பி வந்த நோயாளி நண்பர், விழித்தபடி நின்று கொண்டிருந்தார்.
இப்படிப்பட்டவர்களை எப்படிச் சொல்வதோ?
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
8 hours ago