2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 04/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 04 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கையில், துன்பங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, பல முடிச்சுகளாகச் சில சமயங்களில், இறுகிப்போகலாம். சில நாட்கள் அல்லது ஓரிரு வருடங்கள் கூட எங்களால் சமாளிக்க முடியாமலும் போகலாம்.

ஆனால், நீங்கள் எதிர்பாராத விதமாக ஏக சமயத்தில் அனைத்துத் துன்பங்களுமே சட்டென முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டுவிடும். இத்தகைய அனுபவங்களை நீங்களும் பெற்றிருப்பீர்கள்.

இறைவன் மீது விசுவாசமும் தன்னம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தால், தீராத பிரச்சினைகளும் உடனே தீர்ந்துவிடும். 

சில சமயம் சில நாட்கள், கால தாமதங்கள் ஏற்படவாம். ஆனால், நிச்சயமாக, எல்லாம் பஸ்பமாகிவிடும். 

எப்பொழுதும் எதிர்மறை எண்ணங்களைக் களைந்து விடுக. நல்லவைநடக்கும் என்று உங்கள் கருமங்களைச் சிரமம் பாராது சரிவின்றிச் சரிவரச் செய்து வருக.

பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதும் வாழ்க்கையில், கரிசினையைக் கூரமையாக்க வல்லதே.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .