Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 21 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாங்கள் எல்லோரும், வீட்டுக்குப் பல விருட்சங்களை நாட்டவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
நச்சுப் புகையுடனும் நல்ல தண்ணீர் இல்லாமலும் எத்தனை காலம்தான் தாக்குப் பிடிக்குப் போகின்றீர்கள்?
விருட்சங்களை நாட்டுவது, எமக்கானது மட்டுமல்ல, இன்று அருகிவரும் பறவைகள், மனிதர்களுக்கு பயனைத்தரும் சின்னஞ் சிறு உயிரினங்களுக்குமானதாகும்.
ஒவ்வொருவரினதும் வீடுகளும் பறவைகளின் சரணாலயமாக மாறவேண்டும். இவைகளின் சப்த ஜாலங்களின் அழகை இரசித்து மகிழுங்கள்.
எமது முன்னோர் வைத்த பெருமரங்களை இன்றைய தலைமுறைகள் கொல்வது பச்சைத் துரோகமல்லவா?
நல்ல காற்றை, குளுமையையும் நிலத்து அடியின் நிரைக் காப்பாற்றும் உற்ற துணை மரங்கள் அல்லவா.
பாலை வனத்திலா, அல்லது பசும் சோலையிலா, வாழ நீங்கள் பிரியப்படுகிறீர்கள்? தீர்மானியுங்கள்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago