2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாழ்வியல் தரிசனம் 24/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 24 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனிதர்களை விடச் சிற்றுயிர்கள் படுவேகமுடன் இயங்குவதையும் கிரகித்துக்கொள்ளும் திறனிலும் முன் நிற்கின்றன.

முட்டையில் இருந்து புறப்பட்டு சில மணித்தியாலத்துக்குள் கோழிக் குஞ்சுகள், தனது தாய்க்கோழியைப் பார்த்து நிலத்தைக் கிளறி இரை தேடுகின்றன. கன்றுக் குட்டிகள் ஓரிரு நாட்களில் எங்களால் பிடிக்கமுடியாத வேகத்தில் ஓடி விளையாடுகின்றன. இது படைப்பின் இரகசியம் தான்.

ஆனால், மனிதர்களில் சிலருக்கு சப்தமிட்டுச்சொன்னாலும் புத்திமதிகள்  செவிக்குப் புலப்படுவதுமில்லை. அத்துடன், உடலைச் சுறுசுறுப்பாக வைக்கச் சம்மதிப்பதுமில்லை. இறைவன் படைப்பில் ஓர வஞ்சனைகள் எவையும் இல்லை. தனது படைப்பில் எண்ணற்ற திறமைகளைப் புகுத்தியுள்ளான். இயங்குவதற்காகவே எல்லாமே உருவாகின என்பதை உணருங்கள்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .