Princiya Dixci / 2017 ஏப்ரல் 10 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காதல் ஜோடிகள் பல பிரிவதற்கு இந்தச் சீதன முறைமை பெரும் காரணமாகி விட்டது. பணம், சொத்து இல்லாதவள் திருமணம் செய்ய உரிமையற்றவளா என்கின்ற கேள்வியும் எழுகின்றது அல்லவா?
காதலிக்கு முன்னர் வழங்கிய காதல் மொழிகள் “சீதனம் வாங்கித் தா” எனக் கேட்கும்போது, அந்தப் பேச்சே வாபஸ் பெறப்படுகின்றது. அவன் எழுதிய புதுக்கவிதைகள், இலக்கிய இரசம் மிக்க உரைகள் எல்லாமே கரைந்து போய் விடுகின்றன.
நான் என்ன செய்ய? எனது அம்மாதான் கேட்கிறார். எனக்கு விருப்பமே இல்லை” என நழுவும் ஆசாமிகளை என்னவென்று சொல்ல?
ஐயன்மார்களே! எதனையும் யோசிக்காது பெண்கள் தங்கள் வாழ்க்கையை அமைக்க இயலாது. தன்னை விரும்புகின்றவன் யோக்கியதை, குடும்பத்தின் நிலை, எண்ணங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
வாழ்க்கை ஒரு பரிசோதனைக் கூடமல்ல. அலசி ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்க வேண்டும்.
வாழ்வியல் தரிசனம் 10/04/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
44 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025