2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

வாழ்வியல் தரிசனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறியாமைதான் வீம்பை வளர்க்கின்றது. தனக்குள் உள்ள தகுதியை அல்லது, பிறரின் அருமை, பெருமைகளை உணராதவர்கள் வீம்புடன் நடந்து கொள்பவார்கள். தன்னைப் பற்றியே அறிந்து கொள்ளாமல் இருப்பது, அறியாமையின் உச்சமாகும்.

அறியாமை எனும்போது, கல்வியறிவு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். நன்றாகப் படித்தவர்கள் கூட, இன்னமும் மூடநம்பிக்கைகளை உண்மை என நம்புகின்றார்கள்.

பழைமையான நம்பிக்கைகளில், வாழ்க்கைக்குத் தேவையான பல கருத்துகள் வாழ்க்கை விதிகளாக உண்டு. ஆனால், எதையும் அறிந்தும் புரிந்தும் ஆராய்ந்தும் பார்த்து, அக்கருத்துகளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஏட்டுக் கல்வி கற்காதவர்கள் பலரிடம், அதிசயிக்கத்தக்க வகையில் நுண்ணறிவு காணப்படும். அது, எல்லோரிடமும் இருக்கும் எனச் சொல்ல முடியாது. ஏழை, எளியவர்களுக்கும் மட்டுமே, அறியாமை காணப்படுகின்றது என, நம்மவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

பக்குவப்பட்ட அனுபவசாலிகள், எதையும் தீவிரமாக ஆராய்ந்து, தௌவு பெறுகின்றனர். அறிவு அறிவதற்கானதேயாகும்.

6. -பருத்தியூர் பால. வயிரவநாதன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X