2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வசந்த காலத்து வளர்மதி அவள்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னை எனது அப்பா இராணுவக் கட்டுப்பாட்டுடன் ஒரு கைதி போலவே நடத்திவந்தார். ஒருவருடனும் பழக விட்டதேயில்லை. அம்மாவும் பயத்துடன் கணவரின் சர்வாதிகாரத்துக்கு எதிராக எதுவும் பேசுவதேயில்லை.

என்றாலும் கூட, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஓர் ஏழைப்பெண் என் கண்ணில்பட, அவளை அன்புத் தோழியாக்கிக் கொண்டேன். எனக்கு வயது பத்து; என்னிலும் ஓரிரு வயது குறைந்த வயது அவளுக்கு. களங்கமற்ற அன்பினை அன்றுதான் கண்டேன். வசந்த காலத்து வளர்மதி அவள்.

நாங்கள் பேசுவதைக் கண்ட அப்பா, கடும் கோபத்துடன், “அந்தஸ்து இல்லாத இவர்களுடன் என்ன பேச்சு” எனக் கண்டபடி அடித்து, ஓய்ந்துவிட்டார். உலகம் இருண்டது எனக்கு.

அப்புறம் உடனடியாக வந்த இடமாற்றத்துடன் நாங்கள் இடம்பெயர்ந்தோம். வருடங்கள் உருண்டோட, அந்த ஓட்டத்தில் எனது அம்மா இறந்து போய் விட்டார். எனக்கு அப்​போது வயது இருபது.

அம்மா இறந்து ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே, அப்பா புதிதாக ஒரு பெண்ணைஅழைத்து வந்து, “இவள் உன் சித்தி” என்றார். திடீரென எனக்கு வார்த்தை சூறாவழியாக, “அட நீயும் ஒரு மனுசனா” என்று வீட்டைவிட்டு வெளியேறினேன். இன்று என் தோழியைத் தேடியபடி..தேடியபடி, நான். 

வாழ்வியல் தரிசனம் 03/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X