2024 நவம்பர் 21, வியாழக்கிழமை

‘மோக நிலையில் நிரந்தரமாக இருத்தலாகாது’

Editorial   / 2018 ஜூலை 24 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலர்கள், தமக்குள் ஏதாவது பிணக்கு ஏற்பட்டுவிட்டால் அதுவே, உலகில் மிகப்பெரும் தாக்கம் என நினைத்துக் கொள்வார்கள். பின்னர், அவர்களுக்கிடையில் பிரச்சினைகள் தீர்ந்ததும், தங்களைப் போல சந்தோஷமாக வாழ்வதற்கு, கொடுத்து வைத்தவர்கள் வேறு யாரும் இல்லை எனச் சொல்லிக் கொள்வார்கள். 

மீனைத் தண்ணீரில் இருந்து எடுத்தால் அது துடிக்கும். அடுத்த வினாடி, அதைத் தண்ணீருக்குள் விட்டால், துடிப்புடன் உலா வரும். காதல் இல்லாத வாழ்வு, ஒரு வாழ்வா என எண்ணுபவர்கள், அது மட்டுமே வாழ்க்கையல்ல எனத் தங்களைத் தயார்படுத்துவது கிடையாது. 

மோக நிலையில் எவரும் நிரந்தரமாக இருத்தலாகாது. பிரச்சினைகள், மன உறுத்தல்கள் காதலர்களுக்கு மட்டுமா இருக்கிறது? இல்லையே! 

காதலர்கள், தங்களுக்கான சமூகப் பொறுப்பு பற்றியும் கருதுதல் வேண்டும் அல்லவா? காதல் இனிமையானதும் சுகமானதும்தான். மன வைராக்கியமான, உறுதிமிகு காதலில் கலந்தவர்கள், சகல உறவுகளையும் உதறாத, உறவுபிணைப்புகளிலும் இறுக்கத்தை வைத்திருக்க வேண்டும்.  

வாழ்வியல் தரிசனம் 24/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X