2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

’முன்னேறுவதற்குத் துன்பங்கள் தேவைப்படுகின்றன’

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்க்கையில் தோற்றுவிட்டோம் என்று கடவுளிடம் ச​​ரணடைவதை விடுத்து, காலனுடன் கரைந்து போகின்றார்கள். 

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையா? வாழ்க்கை சுவாரஷ்யமாக இருக்க இன்ப, துன்ப நுகர்வுகள் கட்டாயம் தேவையானவை. எதையும் தொடர்ந்து அனுபவிக்க முடியாது. சலிப்புத் தட்டும்; மாற்றங்கள் களிப்பை உண்டாக்கும். அவைகூட, சில சமயம் வெறுப்பையும் தரும். 

ஆனால், எதையும் மனமுவர்ந்து ஏற்பதுவே, வாழ்க்கையில் அனுபவ ஞானத்தைத் தரும். முன்னேறுவதற்குத் துன்பங்கள் தேவைப்படுகின்றன. 

எளிதாகக் கிடைக்கும் பொருளின் அருமை, தெரிந்து விடாது. எதிர்ப்படும்  கஷ்டங்கள், வாழ்வின் வழி எதுவெனக் காட்டுகின்றன. 

சும்மா கிடைத்தால் சோம்பேறியாவோம். உடலை வருத்தி உழைத்தால், உலகத்தில் நிமிர்ந்து ஓங்கலாம். 

தோல்வியில் இருந்து விடுபட, வாழ்க்கையை மாற்றிக்காட்டு.புதுவழி தேடு; நெஞ்சில் துணிச்சலைத் துணையாக்கு.

வருந்தி அழுவதைவிட, நிமிர்ந்து வாழ்வது மேல்; எழு, நட, ஓடு, வெற்றிகொள்.

வாழ்வியல் தரிசனம் 02/07/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .