2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மனம், ஆன்மா, செயல் இணையாமல் காரிய சித்தி என்பதேது?

Princiya Dixci   / 2016 நவம்பர் 02 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகப்பெரிய அருஞ்செயல்களை அநாயாசமாகச் செய்து முடிப்பவர்கள் கூட, சின்னச் சின்னக் காரியங்களைச் செய்ய முடியாமல் தோல்வியுறுவதுண்டு.

அரும்பணிகளை அவதானமாகச் செய்து கொள்பவர்களும் சின்னக் காரியங்களிலும் அதே அக்கறைகளைக் காட்டியேயாக வேண்டும். நன்மையூட்டும் எந்தக் கருமங்களின் பலாபலன்களை அடையவேண்டுமாயின் உதாசீனமான, அக்கறையற்ற செயல்பாடுகளைத் தவிர்க்க வேண்டும். இவை தோல்வியையே ஏற்படுத்தும். 

மனம், ஆன்மா, செயல் இணையாமல் காரிய சித்தி என்பதேது? பெரிய வேலை, சின்ன வேலை என்று எந்தப் பாகுபாடும் கிடையாது. 

காரியம் முடியும்வரை கவனமாகப் புலன்களை, அறிவினை ஒருங்கிணைப்பீர்களாக.  

சந்தோசமாகச் செய்யும் காரியங்கள் முழுமைபெறும். 

வாழ்வியல் தரிசனம் 01/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X