Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 19 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வீட்டுக்குள் மட்டும் கொண்டாடி மகிழ்வது பூரணமானதல்ல; எல்லோரும் கூடியிருந்து பேதமற இணைந்து கொண்டாடிக் களிப்பதுவே வாழ்வின் உச்சக் களிப்பாகும்.
உங்களுக்கு வேண்டியவர்களுடன் மேலும், நல்ல அன்பர்களையும் புதிதாக இணைத்துக் கொள்க. எங்கள் கொடை, அன்பின் விலாசம், பரிமளத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
புதிதாகப் பல விடயங்களை, மக்கள் பற்றிய உணர்வுகளை, அடுத்தவரின் பிரச்சினைகளைக் கேட்க செவியில் இடம்கொடுக்கவும்.
இதனால் எங்களாலும் சில உதவிகள் பகிரப்படலாம். ஒன்றுமே தெரியாதவர்போல், பாசாங்குடன் கண்மூடித் தன் வழியே செல்வது, இந்தப் பிறப்பையே அர்த்தமற்றதாக்கி விடும். ஏங்கும் மைந்தரைத் தாங்குங்கள்; தூங்கும் மைந்தரைத் தட்டி எழுப்புங்கள்.
உலகத்தில் நாம் பிறந்ததன் அர்த்தத்தைப் புரிய வைத்திடுக. உயிரும் உடலும் உலகுக்கானதுதான். மண்ணும் விண்ணும் எமக்கானது, உணர்வோம்.
வாழ்வியல் தரிசனம் 19/04/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago