Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 26 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாவங்களில் அதுவும் கொடிய பாவங்களில் ஒன்று, உணவகங்களில் கலப்படம் செய்த உணவுகளை விற்பனை செய்வதாகும். இதனை உண்பவர்களுக்கு நோய்கள் உண்டாகி விடுகின்றன. தமது உணவகங்களில் செய்யப்படும் உணவினை இவர்கள் தமது குடும்பத்துடன் இருந்து சாப்பிடுவதுண்டா?
மேலும், சுகாதார சீர்கேடாகச் சமைக்கப்படும் மற்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் உணவு வகைகளையோ உணவகங்களையோ அரசாங்க அதிகாரிகள் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
உணவு, பசிப்பிணி போக்குவது; உடற்பிணி ஊட்டுவது அல்ல!
ஒருமுறை, “நீங்கள் ஏன் திறந்த நிலையில் வைத்து விற்பனை செய்கின்றீர்கள்” என உணவக உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, அதுபற்றி ஒன்றுமே பேசாது, தமது கருமத்திலேயே கண்ணாயிருந்தார்.
விலைவாசியைச் சாட்டாகச் சொல்லி, உணவு விலையைக் கண்டபடி அதிகரிக்கின்றார்கள். மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உணவில் வஞ்சகம் செய்வது, கொஞ்சமும் நல்லது அல்ல! பாவங்களை அள்ளுவதால் என்ன இலாபம்?
வாழ்வியல் தரிசனம் 25/11/2016
பருத்தியூர் பால - வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
29 minute ago
40 minute ago