2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

பொறுமைக்கு முன் கோபம் எடுபடாது

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரத்தினடியில் சுவாமியார் ஒருவர் மக்கள் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒருவர் அவரிடம் வந்து 'சுவாமி‚ எனக்கு அடிக்கடி போபம் வருகின்றது. இதனை எப்படிப் போக்கலாம்? வழி சொல்லுங்கள்' என்றார்.

சுவாமியார் அவரை ஏறஇறங்கப் பார்த்துக் கொண்டார். அப்புறம் சும்மா இருந்து விட்டார். வந்தவர் கோபத்தை வராமல் தடுப்பதற்கான ஆலோசனையை மீண்டும் கேட்டார். ஆனால் சுவாமியாரோ சிறிது புன்னகையுடன் பேசாமல் இருந்து கொண்டார். வந்தவருக்கோ கோபம் பீரிட்டது. பக்கத்திலிருக்கும் அடியார்களையும் மறந்து தாறுமாறாக ஏசுவதற்கு ஆரம்பித்து விட்டார். அவர் ஏசி முடிந்ததும் சுவாமியார் பேச ஆரம்பித்தார்.

'உமது கோபத்தின் வடிவத்தைக் கண்டுகொண்டேன். நீங்களும் என்னைப் போல் ஏன் சும்மா இருக்கக் கூடாது? கோபம் வந்தால் சிரித்துவிட்டு அவ்விடத்தில் அமைதியாகுங்கள்; அல்லது அவ்விடத்தை விட்டு அகன்று விடுங்கள். ஓரிரு வினாடி பொறுமை காத்து இருங்கள்' என்றார். வந்தவர் அமைதியானார்; கோபம், பொறுமைக்கு முன் எடுபடாது.

வாழ்வியல் தரிசனம் 19/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .