Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 15 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசைக்குள் அடைபடுவதால், விடை தெரியாத வாழ்வுக்குள் எம்மை இட்டுச் செல்ல வழிவகுக்கும்.
பொருந்தா ஆசைகளை உடைத்தலே சிறப்பு. எல்லாமே வேண்டும் என எண்ணுதலே ஒரு மாயையான எண்ணம்தான்.
எல்லோரும் துறவியாக முடியாது; ஆனால், முறைப்படி வாழ்ந்தால் நிறை மனிதராக வாழ முடியும்.
தொடுவானத்தைப் பிடிக்க முடியாது. அதுபோல துரத்தும் பேராசையை, அதன் வேண்டுகோளை என்றும் திருப்திப்படுத்த முடியாது. ஒருவன் எங்வளவு தூரத்துக்குத்தான், தேகம் களைக்க பொருள் தேட முடியும். களைத்து அவன் வீழ்ந்துவிட்டதும் அவன் உயிர் பட்டென்று கழன்றுவிடும். தேடிய செல்வம் அவனைப் பார்த்துச் சிரிக்கும். கட்டில்லா வாழ்வு துன்பத்தில் முடியும். சந்தோசத்தை அனுபவிக்க காலத்தை வழங்குக.
வாழ்வியல் தரிசனம் 15/09/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago