2024 டிசெம்பர் 03, செவ்வாய்க்கிழமை

‘நல்லபடியாக வாழவைப்பதே காதல்’

Editorial   / 2018 ஒக்டோபர் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 40 வருடங்களுக்கு முன்னர், ஹிந்தி மொழியில் வெளிவந்த ‘அக்பர்’ படத்தைப் பார்த்தேன். அனார்க்கலி, சலீம் ஆகியோரின் காதல் காவியம். இந்தப் படத்தில் அனார்க்கலி, அக்பர் சக்கரவர்த்தியின் அரச சபையில், தனது உள்ளக் கிடக்கைகளை வெகு துணிச்சலாக, ஆடல் மூலம் வெளிப்படுத்துகிறாள். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் மெய்மறந்து இரசிப்பதுண்டு. கதையின் முடிவு தெரிந்தமையால், துக்கம் தொண்டையை அடைத்திட, கண்கலங்குவதுமுண்டு.

தூய காதலர்களின் சோகக்கதையைப் பார்த்தால், இரசிகர்களின் மனம் துவழ்வதும் சோகப்படுவதும் காணும் நிகழ்ச்சிதான்.

ஆனால், காதல் முழுமை பெற, கால அவகாசம் தேவைப்படுகிறது. இன்று காதல் கொள்பவர்கள், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே, கண்டபடி ஊர் சுற்றுவதும், மனதை அலைபாய விடுவதும், காதல் எனும் உன்னத உணர்வை நிறைவாக்க உதவாது. எவரும் நெஞ்சத்துக்குப் பொய் உரைத்தல் ஆகாது.

இருவரும் உண்மையான, தூய்மைப் பெருநிலையை காதலில் அடைந்தால், அதைவிட மேலான அதிர்ஷ்டம்  வேறென்ன? நல்லபடியாக வாழவைப்பதே காதல்.

வாழ்வியல் தரிசனம் 22/10/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .