2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

சீதனம் கேட்பது என்ன நியாயம்?

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 12 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச அலுவல் நிமித்தம் எனது அலுவலகத்துக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவர் ஓர் உயரதிகாரி. அவர் சொன்ன விடயங்கள் ம​னதை உறுத்தின.

இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள்; மூத்தவள் வைத்தியர். இவளுக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவரும் வைத்தியர்தான். ஏற்கெனவே மகளும் இவரும் ஒருவரை ஒருவர் விரும்பியிருந்தமையினால் திருமணத்தில் தடங்கல்கள் ஏதும் இருக்காது என எண்ணியிருந்தார்களாம்.

ஆனால், அவரும் அவரது பெற்றோரும் நாங்கள் வசிக்கும் வீட்டைச் சீதனமாகக் கேட்டார்களாம். இவர்களும் வேறு வழியின்றிக் கொடுத்து விட்டார்கள். இப்போது அவரும் மனைவியும் பிள்ளைகளும் ரொம்பவும் கஸ்டப்படுகின்றார்கள். திருமணமாகாத இரண்டு மகள்களை என்ன செய்ய? என்பதே அவரது பெரும்துயர். 

தொழில் விசயத்தில் சம அந்தஸ்து உள்ள பெண்களிடமே சீதனம் கேட்பது என்ன நியாயம்? இது ஒரு மரபு முறையாகி விட்டது. எவரையும் இது விட்டுவிடுவது இல்லை.

சேமிக்கும் பழக்கத்தை இந்தமுறை வளர்க்கின்றது என்று விதண்டா விவாதமாகச் சொல்வோர் உண்டு. வெளிப்படையான தவறுகளை சரியானவைகளாகக் காட்டுவதே மிகப் பெரும் தவறாகும். 

வாழ்வியல் தரிசனம் 12/04/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X