2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

‘சுற்றிநிற்பவர்கள் சிந்திக்கவே விடுவதில்லை’

Editorial   / 2017 ஜூன் 19 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களின் அறியாமையால் ஏற்பட்ட துன்பங்களை நினைத்து, நினைத்து உருகுபவர்கள் பலர் உள்ளனர். ஆனால், இத்தகையவர்கள் எவர் வந்து புத்தி சொன்னாலும் கேட்கமாட்டார்கள். இத்தகையவர்கள் விதிதான் காரணம் என்பார்கள்.  

படித்த அறிவாளிகளுக்கும் இந்தப் பிரச்சினையுண்டு. எல்லாமே அறிந்தா நாங்களும் பிறந்தோம்.  

உண்மைகளை உதறாமல், உலக நீதிகளை ஏற்றுநடந்தால், பலவிடயங்கள் புரிந்துவிடும். சுற்றிநிற்பவர்களில் சிலர் மற்றையவர்களைச் சிந்திக்கவே விடுவதில்லை. 

வீட்டுக்குள்ளேயே கணவன், மனைவி பிரச்சினையில் பலரும் தங்களது விருப்ப​த்தையே முன்னிறுத்துவார்களே தவிர, பரஸ்பரம் உண்மைகளைத் தேட முனைவதில் தயக்கம் காட்டுகின்றனர். இதைக் குடும்ப அங்கத்தவரின் அறியாமை என்றே கூற வேண்டும்.  

வீட்டுப் பிரச்சினைகளையே சமாளிக்க முடியாதவர்கள், அடுத்தவர் வீட்டுக்கு வந்து நியாயம் பேசலாகாது. 

வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் வருவதற்கு நாங்கள் மட்டும் காரணமல்ல; உணர்ச்சிவசப்படாமல் உணர்வுடன் இயங்குவதே மேன்மை.  

வாழ்வியல் தரிசனம் 19/06/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .