2025 ஏப்ரல் 17, வியாழக்கிழமை

‘சும்மா இருந்தால் சுகம் கிட்டாது’

Editorial   / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அறிவை நம்பும் நாம், கடவுளின் குரலான மனச்சாட்சியையும் சாதாரண மனித உணர்வுகளையும் நம்பித்தான் ஆகவேண்டும்.

அதேசமயம் தேவையான சந்தர்ப்பங்களில், கற்ற பாடத்தில் பெற்ற அறிவை, மெய்யுணர்வுடன் இணைத்துச் செயல்பட வேண்டும்.

மெய்யறிவு, கல்வியறிவு எல்லாமே, கடவுளால் அருளப்பட்டவை. எனவே, எமக்குத் தேவையான பயன்களைப் பெற, மெய்யறிவு, புலனறிவு, கல்வியறிவு எல்லாமே ஒன்றாக இணைந்து பயணப்பட்டாலே, ஆன்மா பேரின்பப் பெருவாழ்வை அனுபவிக்க முடியும்.

இந்த அவனியும் அதிலிருந்து பெற்றவை எல்லாமே, உலக உயிர்களுக்கானவை. அவைகளை, நாம் உரிய வகையில் பயன்பெற, நேரிய வழியில் செயற்பட வேண்டும்.

ஒன்றுமே இல்லாமல், எதுவும் ஜெனித்ததேயில்லை. இவைகள், மெய்யறிவு, புலனறிவு மூலம் தங்களை ஸ்திரமாக்க முடியும். சும்மா இருந்தால் சுகம் கிட்டாது.

     வாழ்வியல் தரிசனம் 16/10/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X