Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 28 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நான் பாடசாலையொன்றில் பகுதிநேர பணியாளராகப் பணியாற்றுகிறேன். மாணவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதே எனது வேலை. சமைத்து முடித்தவுடன், குவிந்துக் கிடக்கும் பாத்திரங்களைக் கழுவ வேண்டும். பாத்திரங்களைக் கழுவி முடித்ததன் பின்னர் எனது கைகளை என்னால் பார்க்கமுடிவதில்லை. கைகள் சுருங்கியவாறும் நீரில் ஊரியும் வெடிப்புற்றும், கறைகள் படிந்தவாறும் காணப்படுகின்றன. எனவே, எனது கைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளைக் கூற முடியுமா? என பெண் ஊழியர் ஒருவர் கேள்விகளைத் தொடுத்திருந்தார். பாத்திரங்களைக் கழுவுவது, பெண்களின் அன்றாடப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. இதனைத் தவிர்த்துக்கொள்ளவும் முடியாது. அதே நேரத்தில், கைகளின் அழகையும் பேண வேண்டும். கைகளின் அழகைப் பேணுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன.
காலையில் எழுந்தவுடன் மொய்சரைஸ் கிரீம்களைக் கைகளில் பூசிக்கொள்ளுங்கள். ஐந்து நிமிடங்களின் பின்னர், உங்களது பணிகளை ஆரம்பியுங்கள்.
சமயலறைக்குச் செல்வதற்கு முன்னர், கையுறைகளை அணிந்துக்கொள்ளலாம். கையுறைகள் மிக நீளமானதாகவும் தடித்ததாகவும் இருப்பது சிறந்தது. ஏனெனில், நீளம் குறைந்த கையுறைகளுக்குள், நீர் வெகுவிரைவில் சென்றுவிடுமென்பதால், அது பின்னர் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
முடியுமாயின், சூடான நீரை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
பாத்திரங்களைக் கழுவி முடித்ததன் பின்னர், தேசிக்காய் சாற்றுடன் சீனியைக் கலந்து, கைகளில் தேய்க்கவும் 20 நிமிடங்களின் பின்னர், கைகளைக் கழுவவும்.
உங்களது வேலைகள் முடிந்ததன் பின்னர், மொய்ஸரைஸ் கிரீமை கைகளுக்குப் பூசுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
மாதத்துக்கு ஒருமுறைக் கை அலங்காரம் (manicure) செய்யவும். இதனை செய்வதற்கு அழக்குலை நிலையங்களுக்குச் செல்ல வேண்டுமென்பது அவசியமில்லை. வீட்டிலிருந்தும் செய்யலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
23 minute ago
33 minute ago
42 minute ago