Princiya Dixci / 2017 மார்ச் 06 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
விடியவிடிய பேஸ்புக்குடன் சங்கமிப்பதும் கணினியிலும் கைபேசியிலும் எந்நேரமும் விளையாட்டில் ஈடுபடுவதுகூட ஒருமன மயக்கம்தான். எல்லாவற்றுக்கும் ஒரு நேரகாலம் வேண்டும்.
இந்நிலையில் இப்படி இயங்குவதை இறுமாப்பாக, அதை ஒரு சாதனை போல் பேசுகின்றனர்.
நேர விரயம் ஒருவரின் கல்வியை, உடல்நிலையை, முன்னேற்றத்தைப் பின்னோக்கிச் செல்லவைக்கும்.
படிக்கும் வயதில், விழிபிதுங்க, ஒரே திசையில், ஒளியூட்டும் வண்ணத்திரையை வைத்த கண் மூடாமல், புலன்களைப் பேதலிக் வைப்பது நல்லதேயல்ல.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த எத்தனையோ வழிகள் உண்டு. கண்டபடி மூளைக்கு ஒவ்வாத வழிகளில் பயணிப்பது வாழ்வில் தவறுகளை வலிந்து திணிப்பதேயாகும். திட்டமிட்ட கட்டுப்பாடான செயல்கள் கட்டாயம் வெற்றிகளைப் பெற்றுத்தரும்.
வாழ்வியல் தரிசனம் 06/03/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
44 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
5 hours ago
14 Dec 2025