2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை

‘கடவுளைக்காண மதம் தேவையில்லை’

Editorial   / 2017 ஜூலை 31 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடவுளைக்காண மதம் தேவையில்லை. மனுஷத்தன்மைதான் அவசியமானது. 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம் ஆகும். எனவே, எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும் தங்களது ஆன்​மாவைத் தூய்மையுடன் வைத்திருந்தால் அவர்களே உண்மையான ஆன்மீகவாதியாகின்றார்கள். இவர்களே மேலான இறைவனுடன் இணைபவர்களுமாகின்றனர்.  

மானுட நேயம் அற்றவர்கள் கடவுளுக்கும் ​எதிரானவர்கள் தான். பணமும் படையும் வீடும் சொத்தும் அவற்றைப் பெரிது எனக் கொள்பவர்களுக்கே பெரிதெனப்படும்; கடவுளுக்கு அல்ல! 

அன்பானவர்களை ஈசன் நேசிக்கிறான். நல்லோரின் சின்ன இதயத்தில் சிங்காரமாகக் குடிகொண்டிருக்கிறார். எனவே, இத்தகையோருக்குத் துயர் ஏது? சதா சந்தோசம்தான். 

கடவுளின் வீடு நல்லோர் உள்ளம்தான்.  

   வாழ்வியல் தரிசனம் 31/07/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X