Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Editorial / 2018 மே 08 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்லூரி காதல் எல்லா சமயங்களிலும் சரியாகப் பொருந்துவதில்லை. நீயின்றி நான் இல்லையெனச் சொல்லிக் கொள்ளும் காதலர்கள் சிலர் தாங்களாகவே விரும்பிப் பிரிவதுண்டு.
ஆனால், இவன், அவளை இப்படி நேயம் பூண்டதேயில்லை. கல்லூரியை விட்டுச் சென்ற அவள், பல்கலைக்கழக வாழ்வில் தன்னை இணைத்ததும் இவனை; இவன் காதலைத் துண்டித்துவிட்டாள்.
செல்வமும் கல்வியும் இருக்க காதல் என்ன காதல்? வசதியுள்ளவனுடன் இணைந்து கொண்டாள். அவள் நினைத்ததுபோல் திருமணவாழ்வு அமையவில்லை. காசைக் கட்டிக்கொண்டு, அன்பை துண்டித்தால் இல்லறம் சுவைக்குமோ? தவித்துப் போனாள்.
காதலியால் கலங்கியவன், சிலவருடம் புலம்பினான். பின்னர் தெளிந்தான். கல்வியைத் தொடர்ந்தான். கழகத்துடன் இணைந்து பிரபல்யமானான். நீண்ட நெடுங்காலம் கழிந்து அவனை அவள், பொதுநிகழ்வில் கண்டுகொண்டாள். கண்டுகொண்டேன் இவனை; இவன் இன்னமும் காணவில்லை. காணவும் கூடாது, என் துன்ப நிலை தெரியக்கூடாது. மறைந்து சென்று ஒளிந்துகொண்டாள்.
அட உனனை நான் காணவில்லை என நினைத்தாய்; உன்னை கண்டேன். நான் என்ன நினைத்து தேய்ந்தாய்? இந்த காதலைவிட மக்கள் சேவை பெரிதாய் இருக்கிறது. இந்த ஒருத்தியைவிட உலகு பெரிது- நிம்மதியுடன் நகர்ந்தான்.
வாழ்வியல் தரிசனம் 08/05/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
45 minute ago
1 hours ago