2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

ஒட்டுக்கேட்பதால் சமாதானம் கெட்டுப்போய்விடும்

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாராவது ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, அவர்களுடன் எந்த விதமான சம்பந்தமில்லாத ஒருவர், அவர்கள் பேச்சைக் கேட்பதும் அல்லது பேச்சுக்களில் உட்புகுந்து வீணான உரையாடல்கள் செய்வதும் சகிக்க முடியாத செயல்! 

தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் பேசுவதை ஒட்டுக்கேட்பதே நாகரிகமற்ற முறையல்லவா? இன்று நேற்று அல்ல, என்றுமே தேவையற்ற ஒட்டுக் கேட்கும் ப​ழக்கங்களால் பல பிரச்சினைகள் உருவெடுப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குடும்ப உறவுகள் சீரற்றுப் போவதற்கு ஒட்டுக்கேட்கும் பழக்கமே பிரதான காரணியாகும். தவறான முறையில் புரிந்து கொண்டு, அதனைத் தப்பாக மொழி மாற்றம் செய்து, கற்பனை புனைந்து, சீண்டு மூட்டுதல் வெட்கம் கெட்ட வேலையாகும். 

இன்று வல்லரசுகள் தங்கள் புலனாய்வுத்துறையினூடாக அத்துமீறல்களை இவ்வண்ணமே, நவீன உத்திகளுடன் நடத்துகின்றன.  

ஒட்டுக்கேட்பதால் சமாதானம் கெட்டுப்போய்விடும்.  

 

வாழ்வியல் தரிசனம் 28/11/2016

பருத்தியூர் பால - வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .