Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 ஜூலை 06 , மு.ப. 03:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்ல திறமைமிகுப் பேச்சாளர்கள் தங்களது ஆற்றல்களைப் பயன்தரும் விதத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஆனால் சிலரோ, இந்த அரிய வித்தையை மக்களைத் திசை திருப்பும் வண்ணம் செயற்படுத்துகின்றனர். அரசியல்வாதிகளும் மதவாதிகளும் தெரியாத விடயங்களைத் தெரிந்ததுபோல் உண்மையினைக் கூசாமல் திரிபுபடுத்தி வருகின்றனர். மக்கள் இதுபற்றி எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதாகத் தெரியவில்லை.
நாவன்மையை சோரம்போகும் வண்ணம் கையாளுவது உண்மைகளுக்கு விடுக்கப்படும் சவால்போல்த் தெரிகின்றது. உண்மைகள் வெளிவரும்போது இவர்கள் இருந்த இடம் தெரியாமல் போவது உறுதி. நாக்குப் புரளுதல் நல்ல கருமத்தை மாற்றிச் சொல்வது மட்டுமல்ல, பாவங்களைப் பலவந்தமாகச் சுவீகாரம் செய்தலுமாகும்.
வாழ்வியல் தரிசனம் 06/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .