Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2016 ஜனவரி 22 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கிருஸ்ணன்
'முயற்சிக்காமலே முன்னேற வேண்டும் என்று நினைப்பவர்கள் முன்னேறவே முடியாது' முயற்சிக்க வேண்டுமானால் மனம், உடல் இரண்டுமே இணைந்து செயல்பட வேண்டும்.
'மனம் முழுவதும் தன்னம்பிக்கை நிறைந்;து இருக்கின்றது. மனதில் அழமான இலட்சியத்துக்கான நேர்மறை வார்த்தைகள் ஆழமாகப் பதியப்பட்டுவிட்டன. ஆனால் என்னால் முன்னேற முடியவில்லை' இப்படி சிலர் சொல்லாம்.
என்ன காரணம் என்பதை யோசித்து பார்த்தால், ஒரு விடயம் தெரியவரும். அது அவர்களின் மனம் செயல்படும் வேகத்துக்கு, அவர்களது உடல் செயல்பட முடியாமல் துவண்டு போகிறது.
ஆர்வம் இருக்கும் அளவுக்கு ஆரோக்கியமும் அவசியம் அல்லவா? உடல் நலமாக இருந்தால் தானே ஊக்கத்துடன் செயலாற்ற முடியும்.
உங்களுக்கும் அப்படியான நிலை ஏற்பட்டால் ஊக்கத்துடன் கூடிய உழைப்பை மூலதனமாக்கி, வழமையை வரவேற்க நான் தயார். ஆனால், எனது உடல் ஆரோக்கியம் அதற்கு தடை போடுகிறதே.... என்ன செய்வது? இப்படிக் கேட்பவரா நீங்கள்?
ஆரோக்கியம் சீராகி, ஆர்வத்தோடு செயல்படவும், ஆல்ஃபா மைண்ட் வழிகாட்டும். எப்படி?
அதைத் தெரிந்து கொள்ளும்முன், ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
மனதின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போவதுதான் ஆரோக்கியக் குறைவு. எனக்கு மிகவும் சோர்வாக இருக்கிறது என்று உங்கள் மனம் ஒரே ஒரு தடவை நினைத்தாலே போதும். மறுநிமிடமே உடல் சோர்ந்து போகும். மீண்டும் அதனை சுறுசுறுப்பாக்க பலமுறை முயற்சிக்க வேண்டும்.
நன்றாக யோசித்து பாருங்கள். உடல் களைத்து போக 'ஜஸ்ட்' ஒரேமுறை நினைத்தாலே போதும். ஆனால் உற்சாகம் பெற பலமுறை முயற்சிக்க வேண்டும். அதனால் தான் மருந்து மாத்திரைகள் கொடுத்தாலும் 'மனதைத் தளர விடாதீர்கள். நிச்சயம் குணமாகும்' என்று நம்புங்கள் என்று அடிக்கடி சொல்வார்கள்.
அப்படியானால், உடல்நலம் நிலைக்கவும் உள்ளம்தான் காரணம் என்பது தெரிகிறது அல்லவா?
இதோ, இந்த நொடி முதல், உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கப்போகிறது.
நீங்கள் ஆர்வத்துடன் உழைத்திடத் தயாராகப் போகிறீர்கள். ஊக்கத்துடன் செயல்படப் போகிறீர்கள்.
இப்போது நான் சொல்லப்போகும் வாக்கியங்களை நீங்கள் உங்கள் ஆல்ஃபா மைண்டில் அழகாகப் பதியுங்கள்.
• நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
• என் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கின்றது.
• என் பணிகளை செய்யும் போது நான் சோர்வு அடைவதில்லை.
• என் அன்றாடப் பணிகளை நான் ஆர்வத்துடன் செய்கிறேன்.
• என் வீட்டில் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.
• நான் சூழ்நிலைகளால் மனசோர்வு அடைவதில்லை ...?
இப்படி இன்றும் உங்களால் முடிந்த அளவு நேர்மறை வாக்கியங்களை உருவாக்கி திரும்பச் சொல்லுங்கள். வார்த்தைகளில் சொல்வதால் மட்டுமே வலிமைப் பெற்று விட முடியுமா? உங்களில் சிலர் இப்படிக் கேட்கலாம். நிச்சயம் முடியும்
பாண்டவர்கள், நயவஞ்சக சூதாட்டத்தில் உரிமையை இழந்து வறுமையில் வாடிக்கொண்டிருந்தார்கள். பாண்டவர்கள் வனவாசமும் அஞ்ஞாதவாசமும் சென்றுத் திரும்பினார்கள். அப்போதெல்லாம்கூட சற்றும் சளைக்காமலும் களைக்காமலும் இருந்தார்கள் ஐவரும்.
தர்மத்துக்கு சோதனை வந்தததால் தர்மயுத்தம் புரிய வேண்டி வந்தது. யுத்தகாலம் வரும் வரை, சுத்த வீரனான அர்ஜுனன் சட்டென்று சோர்ந்து போனான்.
எதிரே எதிரியாக உறவுகளும் நண்பரகளும் ஆசான்களும் நிற்பதை பார்த்ததுமே பார்த்தனின் மனம் பதறிப்போனது. இவர்களையா நான் எதிர்க்கப் போகிறேன் என்ற ஒற்றை எண்ணம், அவன் இவ்வளவு காலம் பேணிக்காத்து வந்த வீரத்தை வீழ்த்தியது.
அவன் இழந்த அந்த மனதிடத்தை மீண்டும்பெற வைப்பதற்கு பகவானான பரந்தாமன் கீதை எனும் நீண்ட உப தேசம் செய்ய வேண்டி வந்தது. நன்றாக யோசித்துப் பார்த்தால் முன்பு நான் கூறிய உண்மை புரியும்.
கதையைச் சோர்வடையச் செய்ய ஒரே ஒரு வார்த்தை அல்லது ஒரே ஒரு எண்ணம் போதும். அதனால்தான் உடல் நலம் சிறப்பாக இருக்க, உள்ளத்தின் நலம் அவசியமாகிறது.
தன்நம்பிக்கையுடன் தளராமல் உழைத்து தடைகளை தகர்க்க நீங்கள் தயாராகி விட்டீர்கள். அதற்கு ஏற்றாற்போல் இனி உங்கள் அரோக்கியம் சிராகும். இதனால் உங்கள் வாழ்க்கை சிறப்பாகும்.
உடலில் எங்கே உபாதை இருக்கிறது. அந்த இடத்தில் இரத்த ஓட்டம் சரியாக நடக்க வேண்டும் என்ற உங்களது மனதுக்கு கட்டளையிடுங்கள். மறைந்து இருக்கும் நோய் மாறிவிட வேண்டும் என்று உங்கள் எண்ணத்தில் அடிக்கடி நினைத்து அதை கடினமாக செயல்பட நினைக்க வேண்டும்.
தற்போது அது மாறிவிட்டது. நான் இனி சுருசுருப்பாக இயங்குவேன். தெளிவாக தெரிகிறது என்ற எண்ணத்தில் ஒருவித முயற்சி புலப்படுகிறது. நான் இப்போது மிக ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று பல முறை சொல்லி கொண்டு இருக்க வேண்டும்.
பல இடங்களில் ஜெப கூட்டங்கள் நடப்பதை பார்த்து இருப்பீர்கள். கோவிலில் இறைவனது நாமத்தை பலமுறை கூறுவார்கள். இவ்வாறு பலமுறை கூறும்போது அந்த சொல்லுக்கு ஒரு சக்தி உருவாகிறது.
சிலர் சோகமாக இருப்பார்கள். என்னேரமும் அவர்களது எண்ணத்தில் சோகமே இலையோடும். மனதை மாற்றினால் சோகம் மறைந்து புதுவித தெளிவு ஏற்படும்.
இருள் சூழ்ந்து இருப்பது போல் தெரிந்தாலும் ஒளி மறைந்து தான் இருக்கின்றது. சோர்வு என நினைத்துப்;படுத்து இருப்பதனால் மேலும் சோர்வுதான். மெல்ல மெல்ல நடப்பதால் எமது இரத்த நாளங்கள் இயங்க இரத்த ஓட்டம் சீர்படும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago