Princiya Dixci / 2017 ஏப்ரல் 29 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிலும் நீங்கள் முதல் நபராக வரவேண்டும் என எண்ணலாம். அவ்வண்ணம் நீங்கள் நினைத்தபடியே உயர் நிலைக்கு வந்துவிடலாம். அதில் தப்பே இல்லை.
ஆனால், உங்களுக்குப் பின்னர், வேறு ஒருவரும் உங்களது நிலைக்கு வரக்கூடாது என எண்ணுதலே மகா தவறாகும்.
தனி ஒருவனை மட்டும் நம்பி இந்த உலகம் இல்லை. ஒருவர் போக இன்னொருவர் அவரை விட உன்னதமானவராக வரலாம். இது ஒன்றும் புதினமானது அல்ல!
குறிப்பிட்ட பல உன்னதமான மனிதர்கள், இங்கு பிறந்து அரும் பெரும் சாதனைகளைச் செய்து முடித்தமையை உலகம் மறப்பதில்லை.
இப்படியிருக்க, நானே என்றும் இருப்பேன்; என்னைப் போல ஒருவரும் வரக்கூடாது என நினைப்பதுபோல் அறியாமை வேறு ஏது? இத்தகையவர்கள் கௌரவம் இழப்பது உறுதி. ஆணவ முனைப்பு இழிவைத் தரும்.
வாழ்வியல் தரிசனம் 28/04/2017
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
6 hours ago
14 Dec 2025