2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

அறிவுடன் ஞானம் என்றுதான் அழிந்தது?

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓர் அறிஞரை மட்டுமல்ல, பல அறிஞர்களின் முகம் எதுவெனப் பலருக்கும் தெரியாது. அவர் ஊர், அவர் குடும்பம் எங்கே உள்ளது? எப்படி அவர் சிருஷ்டிகளை உற்பத்தி செய்தார் என்பதையே அறியாது, முகம் அறியாது, அவர் சொன்னவற்றை மட்டும் உள்வாங்கி இரசிக்கிறார்கள். 

அறிவாளிகள் தாம் இறந்த பின்னரும், பேசிய வண்ணம் இருக்கின்றனர். இந்த ஞான உற்பத்தி இயந்திரம் பழுதடைவதேயில்லை.பெருமையுடன் பேச மட்டும் அவர்கள் வாய் மௌனிக்கிறது. 

மெழுகென உருகித் தேய்ந்தாலும், அவள் தந்த ஒளி மட்டும், அணையாமல் இருப்பது விந்தையல்ல. 

காலம் என்றும் கரைவதில்லை. ஏனெனில், அது வாழ்வாங்கு வாழ்வோரைத் தொடர்ந்து உருவாக்குகின்றது.

எனவே, காலம் தீர்க்காயுசுதான். சுற்றிக் கொண்டே ஓடியபடி சடங்கள் தான் அழியும். அறிவுடன் ஞானம் என்றுதான் அழிந்தது? அது பலராலும் எமக்கு வ​ழங்கப்பட்டதால்த்தான், இன்று சாதாரணமானவர்கள் கூட, உண்மை தேடும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் கூட அருவம்போல்த்தான் இயங்குகின்றார்கள்.  

வாழ்வியல் தரிசனம் 27/09/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .