2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

‘அகங்காரத்துடன் சமரசம் பேச முடியாது’

Editorial   / 2018 ஜூன் 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொருவருடைய பார்வையும், ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதும் சில சமயங்களில், உடன்பாடாக இருப்பதும் உண்டு. தங்களது எண்ணங்களுக்கு உடன்பாடாக இருந்தால் மட்டும், அவர்களைப் பாராட்டி நட்புடன் பேசிக்கொள்வார்கள்.

தங்களுக்கு ஒவ்வாத கருத்துகள் பிறரிடம் இருப்பின், அவர்களை எதிரிகளைப் போல் நோக்குவது அறியாமை தான். ஏனெனில், எல்லோருக்குமே சிந்தனைத் திறன் உண்டு. தங்களுக்கு விரும்பிய, தங்கள் மூளை சொன்னதை மட்டுமே ஏற்றுக்கொள்கிறார்கள்.

இதனை உணராமல், மற்றவர் கருத்தில் திருப்தியடையாவிட்டால், முரண்படுவது சரிதானா? ஆனால், இருசாரார் கருத்துகளும் தவறானதாகவும் இருக்கலாம்.

கருத்து முரண்பாடுகளை ஆராய்வது நல்லது. அமைதியான தேடல்களில், நற்பயன் கிட்டும். நீதிக்கு, உண்மையில் பக்கச்சார்பு கிடையாது.

எனினும், நீதி வழங்குவதில் தவறுகள் நேரலாம். ஆனால், உண்மைகளுக்கு ஒரே வடிவம் தான். மாறவே மாறாது. அகங்காரத்துடன் சமரசம் பேச முடியாது. அகங்காரம் கொண்டோர், நீதி செலுத்தவும் முடியாது.

வாழ்வியல் தரிசனம் 12/06/2018

- பருத்தியூர் பால. வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .