2025 ஏப்ரல் 21, திங்கட்கிழமை

82 கிலோ கிராம் ஆமை இறைச்சியுடன் இருவர் கைது

Editorial   / 2024 மே 30 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்ட விரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கடலாமை இறைச்சிகளுடன் 2 சந்தேக நபர்கள் வியாழக்கிழமை(30) பள்ளமடு பிரதான வீதியில் வைத்து மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 82 கிலோ கிராம் கடலாமை இறைச்சி  பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மீன்கள் பொதி செய்து கொண்டு செல்லும் போர்வையில் குறித்த கடலாமை இறைச்சி பொதி செய்யப்பட்டு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது.   இராணுவ புலனாய்வு துறைக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் பள்ளமடு வீதியில் வைத்து குறித்த வாகனத்தை சோதனை செய்த போது குறித்த கடலாமை இறைச்சிகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதை கொண்டு சென்ற இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X