2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வீதி விளக்குகள் திருத்தப்பட வேண்டும்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசபை எல்லை பரப்பில் பழுதடைந்த வீதி விளக்குகள் திருத்தப்பட வேண்டும் என கரைதுறைபற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலன் தெரிவித்துள்ளார். 

நீண்ட காலமாக பழுதடைந்த வீதி விளக்குகள் திருத்தம் செய்யப்படாமல் உள்ளது.  இது தொடர்பாக பொது மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன. 

பிரதேச சபையின் வளங்களைப் பயன்படுத்தி நீண்ட காலமாக திருத்தப்படாமல் உள்ள வீதி விளக்குகள் திருத்தப்பட வேண்டும். 

அத்துடன் புதிய வீதி விளக்குகள் விரைவாக பொருத்தப்பட வேண்டும். பொது மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே நீண்ட காலமாக வீதி விளக்குகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன.  

இவை திருத்தம் செய்யப்பட வேண்டும். பிரதேச சபை உறுப்பினர்களின் வட்டாரங்களில் முன்னுரிமை அடிப்படையில் தேவையின் முக்கியம் கருதி வீதி விளக்குகள் பொருத்தப்பட வேண்டும் எனவும் பிரதேச சபை உறுப்பினர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .