2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

விளம்பரம் மட்டுமே உள்ளது; வேலை முடியவில்லை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு - அம்பலப்பெருமாள் குளத்தில் இருந்து அக்கராயன் நோக்கி வீதி அமைத்தல் வேலைத் திட்டம் நீண்ட காலமாக முடிக்கப்படாமல் உள்ளது.  

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று கிலோ மீற்றர் வீதி நிரந்தரமாக அமைக்கப்படும் என விளம்பரப் பலகைகள் கிராமத்தில் நாட்டப்பட்டுள்ள போதிலும், அதற்குரிய வேலைகள் இடம் பெறாத நிலையில் காணப்படுகின்றது. 

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வீதி வேலைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

1968ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அம்பலப்பெருமாள் குளம் கிராமத்தில் தற்போது 110 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்ற போதிலும் முதன்மை வீதி தற்காலிக வீதியாகவே தற்போது வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .