Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை
Freelancer / 2023 டிசெம்பர் 08 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து அமலுக்கு வரும் வகையில் அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி அந்நாளில் இருந்து இலத்திரனியல் மின்பட்டியல் அனுப்பிவைக்கப்படும் என்றும் இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.
குறித்த இலத்திரனியல் மின்பட்டியலை இ-பில் (e-bill) மற்றும் குறுந்தகவல் (SMS) மூலமாகவோ, அல்லது மின்னஞ்சல் (e-mail) மூலமாகவோ பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக REG (இடைவெளி) கணக்கு இலக்கம் என டை (type) செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவலை (SMS) அனுப்பி பதிவு செய்யலாம்.
மேலும் EBILL (இடைவெளி) கணக்கு இலக்கம் (இடைவெளி) உங்களுடைய மின்னஞ்சல் என டைப் (type) செய்து 1987 என்ற இயக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) அனுப்பு பதிவு செய்யல்லாம்.
இதுபட்டுமல்லாமல் EBILL.ceb.lk என்ற இணையப் பக்கத்தின் ஊடாகவும் பதிவு செய்யலாம் என்றும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago