2025 பெப்ரவரி 01, சனிக்கிழமை

மூவருக்கு தலா ஒரு இலட்சம் தண்டம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழில் அரிசிக்கான நிர்ணய விலையை விட  அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்களும், சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவரும் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புகொண்டமையை அடுத்து மூவருக்கும் தலா ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட  பாவனையாளர் அதிகார சபையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகளை நடாத்தி , அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த இரு வர்த்தகர்கள் மற்றும் எரிவாயு சிலிண்டரை பாவனையாளருக்கு வழங்காது பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் என மூவருக்கு எதிராக தனித்தனியாக நீதிமன்றில் வழங்கு தாக்கல் செய்தனர். 

குறித்த வழக்கு விசாரணைகளின் போது வர்த்தகர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டமையை அடுத்து, மூவருக்கும் நீதிமன்று தலா ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிட்டுள்ளது.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X