2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவில் மூன்றாம் கட்ட நிவாரணம்

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ. கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், வறுமைக் கோட்டுக்குகீழ் வாழும் மக்கள், உலக உணவுத்திட்டத்தின் ஊடான நிவாரணத்தை நேற்று முன்தினம் (06) மக்கள் பெற்றுக்கொண்டார்கள்.

உணவு பற்றாக்குறை, போசாக்கின்மையைக் கருத்தில் கொண்டு, உலக உணவுத்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தையும் உள்வாங்கி, ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம், சமுர்த்தி பயனாளியாக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாக, தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு அலைபேசி ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டு, அந்தக் குறுந்தகவலுக்கு அமைய 20,000 ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய ஹார்கிள்ஸ் பூட்சிற்றி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகரிலுள்ள பூட்சிற்றியில், மக்கள் தங்கள் அடையாள அட்டையை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்வதில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவ்வாறு 9,575 குடும்பங்கள் பதிசெய்யப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையைக் கண்காணிப்பதில் சர்வோதய நிறுவனம் ஈடுபட்டுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .