2025 மார்ச் 03, திங்கட்கிழமை

முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 07:54 - 0     - 270

செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .