2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மாணவியை விபத்துக்குள்ளாக்கிவிட்டு தப்பிச் சென்ற பேருந்து

Freelancer   / 2022 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.கீதாஞ்சன்

கிளிநொச்சி - A 35 வீதியின்  பரந்தன், முரசுமோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை விபத்துக்கு உள்ளாக்கி தப்பிச் சென்ற பேருந்தினையும் அதன் சாரதியையும் உடனடியாக விடுவித்த பொலிஸார், மாறாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று(07) காலை 7.45 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற  குறித்த மாணவி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்தில் எற முற்பட்ட போது, மாணவி ஏறுவதற்கு முன்னர் பேருந்தை வேகமாக  எடுத்ததனால் மாணவி  கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இதில் காயமடைந்த மாணவி கிளிநொச்சி  மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்   நிலையில், பேருந்தின் சாரதி சம்பவ இடத்திலிருந்து  பேருந்தினை கொண்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த  மாணவின் சகோதரர் உட்பட இருவர்  விபத்துடன் தொடர்புடைய பேருந்தை துரத்திச் சென்று, வழி மறித்து  வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன்   சாரதி மற்றும் நடத்துனர்கள் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும், சம்பவ இடத்திற்குச் சென்ற தருமபுரம் பொலிஸார் விபத்தினை  ஏற்படுத்திய பேருந்தினையும்  விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் உடனடியாகவே விடுவித்துள்ளதுடன் மாறாக பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .