2025 பெப்ரவரி 20, வியாழக்கிழமை

மாங்குளத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி

Editorial   / 2024 மே 26 , பி.ப. 12:51 - 0     - 135

சண்முகம் தவசீலன் 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வடக்குக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று (26) முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தருகின்றார் 

  முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பகுதியிலே மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொள்வதோடு மாங்குளம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை திறந்து வைப்பதற்காக வருகை தர இருக்கின்றார்

மாங்குளம் மகா வித்தியாலயா மைதானத்திற்கு உலங்குவானூர்தியிலே வருகை தருகின்ற ரணில் விக்கிரமசிங்க, மாங்குளம் வைத்தியசாலை கட்டிடத்தை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் மாங்குளம் நகரம் மற்றும் மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டிருக்கின்றது 

குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தின்போது வடக்கில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X