2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

மல்லாவியில் கத்தி குத்து; ஒருவர் படுகாயம்

Freelancer   / 2022 செப்டெம்பர் 16 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - மல்லாவி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த ஆணைவிழுந்தான்  பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய குலேந்திரதாஸ் விஜயதாஸ் என்ற நபர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் மல்லாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .