2024 நவம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் வாழ் உயிரினம்

Freelancer   / 2023 ஜூன் 23 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன்

பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 08 வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின்  கடற்கரை மணலில் புதைப்பதற்கான  நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை  (22)  பாம்பன் தெற்கு  மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில்  இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனச்சரகர் மகேந்திரனுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து பறவைகள், நாய் உள்ளிட்டவைகள் இறந்த கடல் பசுவின் உடலை சேதபடுத்தாமல் இருக்க  கடல் பசு மீது பிளாஸ்டிக் கவர் ஒன்றை போட்டு மூடி வனத்துறையினர் இரவு முழுவதும் பாதுகாத்தனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஆண் கடல்  பசு எனவும் அது சுமார் 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், கடல் பசு பாறைகளில் முட்டியதால் உயிரிழந்ததா?  அல்லது உடல்நிலை சரியில்லாமல் வயதின் மூப்பின் காரணமாக உயிரிழந்ததா? என கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின்னரே முழுமையான காரணம்  தெரியவரும் என மண்டபம் வனச்சரகர்  தெரிவித்தார்.

கடற்கரை ஓரம் மீன் வனத்துறையினரின்  தடையை மீறி மீன் பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள்  படகின் மீது மோதி  கடல் பசு இறந்திருக்கலாம் என அப்பகுதியில்  மீன் பிடிக்கும் நாட்டு படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .